காரில் மதுபானம் கடத்தல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது
காரில் மதுபானம் கடத்தல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது.
நிலக்கோட்டை,
விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு விளாம்பட்டி-நிலக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேல்மணி வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் 396 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்தவர் விளாம்பட்டி டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளரான கும்மனம்பட்டியை சேர்ந்த வேல்மணி (வயது 49) என்றும், காரை ஓட்டி வந்தவர் பஞ்சம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கில் தனது ஊரில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி செல்வதாக வேல்மணி தெரிவித்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்மணி, செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story