தளர்வில்லாத முழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி அனைத்து வீதிகளும் வெறிச்சோடின


தளர்வில்லாத முழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி அனைத்து வீதிகளும் வெறிச்சோடின
x
தினத்தந்தி 31 Aug 2020 6:40 AM GMT (Updated: 31 Aug 2020 6:40 AM GMT)

தளர்வில்லாத முழு ஊரடங்கால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி அனைத்து ஊர் வீதிகளும் வெறிச்சோடின.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால், அதை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

பின்னர் ஆகஸ்டு மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரங்கு கடைபிடிக் கப்படும் என முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இந்த மாதத்தின் 5-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

நேற்று முகூர்த்த தினம் என்பதால் திருமணங்கள் நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக பலர் சென்றனர். காலை 10 மணி வரை திருவண்ணாமலை நகரில் மக்கள் நடமாட்டம் அதிமாகவே இருந்தது. மதியத்துக்கு பின்னர் அனைத்து வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இதனால் திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடியது. வேட்டவலம ரோடு, போளூர் ரோடு, மூங்கில்பேட்டை ரோடு, திண்டிவனம் ரோடு உள்பட அனைத்து ரோடுகளிலும் இதே நிலை காணப்பட்டது.

இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், மருத்து வமனைகள் மட்டும் திறந் திருந்தன. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆரணி-போளூர்

முழு ஊரடங்கால் ஆரணி நகரில் பிரதான சாலைகளான காந்தி ரோடு, மண்டிவீதி, மார்க்கெட் ரோடு, பெரிய கடை வீதி, வி.ஏ.கே.நகர், அருணகிரிசத்திரம், சைதாப் பேட்டை, ஆரணிப்பாளையம், கொசப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பால்கடைகள், மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன மற்ற அனைத்து கடைகளும் மூடப் பட்டிருந்தது.

நகரில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றி வந்தவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் போளூரில் சாலைகள் வெறிச் சோடியது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Next Story