மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி - பிரியாணி வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
நெட்டப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
பாகூர்,
நெட்டப்பாக்கம் அருகே தமிழக பகுதியான வடுகுப்பம் காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 25). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் இவரும் அதே பகுதியை சேர்ந்த முகிலன் (17) என்பவரும் நெட்டப்பாக்கத்தில் பிரியாணி வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
கடையில் பிரியாணி வாங்கிக்கொண்டு இருவரும் வீடு திரும்பினர். கல்மண்டபம் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே அந்த வழியாக கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம், முகிலன் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்துபோனார். முகிலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story