இ-பாஸ் ரத்து எதிரொலியாக சென்னையை நோக்கி படையெடுப்பு: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் - கடும் போக்குவரத்து நெரிசல்


இ-பாஸ் ரத்து எதிரொலியாக சென்னையை நோக்கி படையெடுப்பு: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் - கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 1 Sep 2020 1:21 AM GMT (Updated: 1 Sep 2020 1:21 AM GMT)

தமிழகம் முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து என்பது உள்ளிட்ட தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு,

கொரோனா தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து என்பது உள்ளிட்ட தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் பணிபுரியும் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு அளித்துள்ள இ-பாஸ் ரத்து உள்பட பல்வேறு தளர்வுகளின் காரணமாக சொந்த ஊர் சென்ற தென்மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் சென்னைக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பெரும்பாலானோர் தற்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களான சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story