மாவட்ட செய்திகள்

திருத்தணி, வீரராகவ பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் + "||" + Devotees gather at Thiruthani and Veeragava Perumal temples to observe the social gap and perform Sami darshan

திருத்தணி, வீரராகவ பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம்

திருத்தணி, வீரராகவ பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம்
தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, வீரராகவ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் காலை முதலே திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் கோவில் கள் மூடப்பட்டு, சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு உத்தரவின் பேரில், தடை விலக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் 160 நாட்களுக்கு பிறகு நேற்று நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.


கோவிலில் மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலிலுள்ள விநாயகர், உற்சவர் வள்ளி தெய்வயானை மற்றும் சண்முகர் சன்னதிகளில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

இதையடுத்து திரண்டு வந்த பக்தர்கள் மிகுந்த பரவசத்துடனும், பயபக்தியுடனும் சாமி தரிசனம் செய்து சென்றனர். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்வெப்பத்தை கண்டறியும் தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர், கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் பழனிக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

பக்தர்கள் திரண்டனர்

இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி, பூதேவி வீரராகவ பெருமாள் கோவிலில் காலையிலில் இருந்தே 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக திரண்டனர். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் தரிசனத்திற்கு வந்த பக்தர் களை உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்து, அனைவரும் முக கவ சம் அணிந்து உள்ளனரா என கண்காணித்து கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
2. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
3. புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
4. அனந்தமங்கலம் கோவிலில் இருந்த 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்பு விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறது
பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் கோவிலில் இருந்த 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது. இந்த சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
5. திருச்செந்தூரில் 5 மாதங்களுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் கடலில் புனித நீராட தடை
5 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனால், கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.