மாவட்ட செய்திகள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் “நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி அமையும்” அர்ஜூன் சம்பத் பேட்டி + "||" + Interview with Arjun Sampath on "Spiritual rule under actor Rajinikanth"

வருகிற சட்டமன்ற தேர்தலில் “நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி அமையும்” அர்ஜூன் சம்பத் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் “நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி அமையும்” அர்ஜூன் சம்பத் பேட்டி
“வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி அமையும்” என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
நெல்லை,

தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம், கபசுர குடிநீர் வழங்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் மண்டபங்களில் சித்த வைத்தியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கொரோனாவை ஒழிக்க கோவில்களில் யாகங்கள், ஹோமங்கள் நடத்துவது சரியான வழிமுறையாகும்.


தமிழகத்தில் கோவில்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளதுபோல் திருவிழா, கொடை விழாக்களை நடத்தவும் அரசு அனுமதி வழங்கவேண்டும். புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு உடனடியாக அணுமதி வழங்க வேண்டும்

கயத்தாறு தொழிலாளர்கள்

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 40 குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரண உதவி கிடைக்கவில்லை. எனவே, அவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று தொழில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.

ஆன்மிக ஆட்சி

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி அமையும். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் இல்லாத ஆன்மிக ஆட்சியை ரஜினிகாந்த் ஏற்படுத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அர்ஜூன் சம்பத், பாளையங்கோட்டை குத்துப்பாறைசாலை இசக்கியம்மன் மற்றும் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கொடை விழா, பூஜையில் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் 115 நகரும் ரேஷன் கடைகள் சேவை இன்று தொடக்கம் அமைச்சர் தங்கமணி பேட்டி
நாமக்கல் மாவட்டத்தில் 115 நகரும் ரேஷன் கடைகள் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
2. வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை அமைச்சர் தங்கமணி பேட்டி
வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
3. வேளாண்மை சட்ட திருத்தத்துக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நாகையில் முத்தரசன் பேட்டி
வேளாண்மை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று நாகையில் முத்தரசன் கூறினார்.
4. நானும் ஒரு விவசாயியே; குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும்: ராணுவ மந்திரி பேட்டி
நானும் ஒரு விவசாயி என்றும் நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.
5. நீட் விவகாரத்தில் அவருடைய கருத்து ஏற்புடையது நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் சீமான் பேட்டி
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.