சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 10 பேர் காயம்


சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 10 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Sept 2020 4:29 AM IST (Updated: 3 Sept 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

புனே,

புனே வட்காவ் கணேஷ் நகர் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 6.20 மணி அளவில் திடீரென சமையல் கியாஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

10 பேர் காயம்

விபத்தில் தீக்காயம் மற்றும் சுவரின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் என காயமடைந்த 10 பேரை மீட்டனர். அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் 2 ஆண்கள், 4 பெண்கள், மற்றும் 4 சிறுமிகள் என்பது தெரியவந்தது. இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story