ஆரேகாலனியில் உள்ள 600 ஏக்கர் நிலம் வனப்பகுதியுடன் சேர்ப்பு உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
ஆரேகாலனியில் உள்ள 600 ஏக்கர் நிலத்தை வனப்பகுதியுடன் சேர்த்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மும்பை,
மும்பையில் கொலபா- பாந்திரா- சீப்ஸ் இடையேயான மெட்ரோ திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்காக முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்காக ஆரேகாலனியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை அமைக்கும் பணியை நிறுத்தி வைத்து இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மெட்ரோ பணிமனையை ஆரே காலனியில் இருந்து கோரேகாவுக்கு மாற்றும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய எம்.எம்.ஆர்.டி.ஏ.வுக்கு உத்தரவிட்டார்.
வனப்பகுதியுடன் சேர்ப்பு
இந்தநிலையில் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவையொட்டி ஆரேகாலனியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நிலத்தை வனப்பகுதியுடன் சேர்க்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இந்த முடிவு நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே, வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோடு, நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி ஏக்னாத் ஷிண்டே, தலைமை செயலாளர் சஞ்சய் குமார் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
மக்களின் உரிமை பாதுகாக்கப்படும்
ஆரேகாலனி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என மாநில அரசு உறுதி அளித்து உள்ளது.
இதுகுறித்து மந்திரி ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
வனப்பகுதியாக அறிவிக்கப்பட உள்ள இடத்தில் உள்ள குடிசைப்பகுதினருக்கு மறுவாழ்வு திட்டங்கள் தொடங்கப்படும். முதல் கட்டமாக இந்த பணிகள் நடைபெறும். 2-வது கட்டமாக கூடுதல் நிலத்தை சேர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா, ஆரேவில் உள்ள பல்லூயிர்களை பாதுகாக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story