சாத்தான்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன் வீசப்பட்ட மர்மபொருளால் பரபரப்பு
சாத்தான்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் வீட்டின் முன் வீசப்பட்ட மர்மபொருளால் பரபரப்பு நிலவியது.
சாத்தான்குளம்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையைச் சேர்ந்தவர் நல்லக்கண்ணு மகன் துரை (வயது 44). விவசாயியான இவர் இந்து முன்னணி ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். நேற்று காலையில் இவரது வீட்டின் முன்பு சிறிய உருண்டையில் நூல் சுற்றப்பட்டு, திரி வைக்கப்பட்ட நிலையில் நாட்டு வெடிகுண்டு போன்ற மர்மபொருள் கிடந்தது.
இதனை பார்த்த துரை மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, அங்கு இந்து முன்னணி கோட்ட தலைவர் சக்திவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டனர்.
தேங்காயில் நூல் சுற்றப்பட்டு...
உடனே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிளாட்வின் ஜெகதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மர்மபொருளை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கிடந்தது, வெடிப்பொருள் அல்ல என்பதும், சிறிய தேங்காயைச் சுற்றிலும் நூல் சுற்றப்பட்டு, அதில் திரி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. பின்னர் அதனை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
பரபரப்பு
இந்து முன்னணி நிர்வாகியை மிரட்டும் வகையில், யாரேனும் போலியான நாட்டு வெடிகுண்டு போன்று தயாரித்து வீசிச் சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து முன்னணி பிரமுகர் வீட்டின் முன்பு வீசப்பட்ட மர்மபொருளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், “பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story