தென்காசி, குற்றாலம் பகுதியில் சுவர்களில் எழில்மிகு ஓவியங்கள்


தென்காசி, குற்றாலம் பகுதியில் சுவர்களில் எழில்மிகு ஓவியங்கள்
x
தினத்தந்தி 3 Sep 2020 10:30 PM GMT (Updated: 3 Sep 2020 8:05 PM GMT)

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்கும் வகையிலும், சுவர்கள் எழில்மிகு கலைநயத்துடன் இருக்கும் வகையிலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

தென்காசி,

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல் (தென்காசி), சுரேஷ் (குற்றாலம்) ஆகியோர் ஆலோசனையின்படி, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்கும் வகையிலும், சுவர்கள் எழில்மிகு கலைநயத்துடன் இருக்கும் வகையிலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. மாவட்ட காவல்துறை, மழை நண்பர்கள் குழு, பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து சுவர்களில் குற்றாலம் அருவிகள், தென்காசி மாவட்ட அணைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தத்ரூபமாக ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தென்காசி புதிய பஸ் நிலையம், குற்றாலம் பஸ் நிலையம், தென்காசி சாலை தங்கும் விடுதி பகுதி, பூங்கா, பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து பார்வையிட்டனர். ஏற்பாடுகளை மழை நண்பர்கள் குழு நிறுவனர் சுந்தர மகேஷ், தலைவர் ராமசுப்பிரமணியன், ஓவியர் மாரியப்பன், உறுப்பினர்கள் பாரதிராஜா, குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story