கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் 4-வது மாடியில் இருந்து விழுந்த பெண் பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை
கொரோனா தனிமைப்படுத்தல் வார்டு அமைக்கப்பட்டு உளள கல்லூரி விடுதியின் 4-வது மாடியில் இருந்து விழுந்த பெண் பலியானார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தமிழக அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்படும் வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வி(வயது 48) என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். நேற்று மாலை விடுதியின் 4-வது மாடியில் இருந்து செல்வி, தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், பலியான செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், செல்வி கொரோனா பாதிப்பால் இங்கு தனிமைப்படுத்தப்பட்ட நாள் முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்தவர்களிடம் இந்த விடுதியில் இருந்து எப்படியாவது வெளியே சென்று விடவேண்டும் என்று புலம்பி வந்துள்ளார்.
இந்தநிலையில்தான் திடீரென 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். எனவே செல்வி, இங்கிருந்து வெளியே தப்பிச்செல்ல முயன்றபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மனஉளைச்சலில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது உண்மையிலேயே நிலைதடுமாறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த லட்சுமியின் மகன் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதே தனிமைப்படுத்தல் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் தங்கி உள்ளவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story