மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; இளம்பெண் பலி 2 பேர் படுகாயம் + "||" + Truck collides with motorcycle near Thoothukudi; Teen killed, 2 injured

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; இளம்பெண் பலி 2 பேர் படுகாயம்

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; இளம்பெண் பலி 2 பேர் படுகாயம்
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி தேவர்புரம் 7-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அந்தோணி மேரி கலிஸ்டா (வயது 21). இவரது தங்கை கிளிட்டா (19). இவர்கள் 2 பேரும் தருவைகுளத்தில் உள்ள மற்றொரு சகோதரியை பார்த்துவிட்டு தூத்துக்குடிக்கு திரும்பினர். அவர்கள், உறவினரான சண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி (40) என்பவரது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி உள்ளனர்.


அவர்கள் தாளமுத்துநகர் பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வரும் போது, பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஒரு லாரியை முந்தி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கிச் சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இளம்பெண் பலி

இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி மேரி கலிஸ்டா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாடசாமி மற்றும் கிளிட்டா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே குழந்தைகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயன்றதை தட்டி கேட்டதால் மோதல் 6 பேர் கைது
திருவள்ளூர் அருகே குழந்தைகள் மீது மாட்டு வண்டியை ஏற்ற முயன்றதை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. குலசேகரன்பட்டினம் அருகே இரு தரப்பினர் மோதல்; தந்தை-மகனுக்கு கத்திக்குத்து 8 பேர் மீது வழக்கு
குலசேகரன்பட்டினம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், தந்தை-மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. தாய்லாந்து நாட்டில் ரெயில், பேருந்து மோதல்; 17 பேர் பலி
தாய்லாந்து நாட்டில் ரெயில் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
4. சுவர் விளம்பரம் செய்வதில் மோதல்: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
சுவர் விளம்பரம் செய்வதில் மோதல்: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் சென்னையில் 7 இடங்களில் நடந்தது.
5. விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் படுகாயம் பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.