தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 15-ந்தேதி கடைசி நாள்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் மாணவர்கள் வருகிற 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேவையான அசல் சான்றிதழ்கள் (8, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சிறப்பு இனங்களில் முன்னுரிமை சான்றிதழ்கள்) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பிற மாநிலத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இடம் பெயர்வு சான்றிதழ் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உதவி மையங்கள்
மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனை அணுகி மாணவர்கள் பயன்பெறலாம். விண்ணப்பதாரரின் மதிப்பெண் மற்றும் இனஒதுக்கீட்டின்படி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலாவை 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story