“பா.ஜ.க. டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான்” எச்.ராஜா சொல்கிறார்
“பா.ஜ.க. டெல்லிக்கு மட்டும் ராஜா அல்ல. தமிழகத்திலும் ராஜாதான்” என்று மதுரையில் அளித்த பேட்டியில் எச்.ராஜா கூறினார். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை,
திருப்பதி கோவில் சொத்துகள் குறித்த தணிக்கைக்கு கோர்ட்டு, தீர்ப்பையடுத்து ஆந்திர இந்து அறநிலையத்துறை ஒத்துக்கொண்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோவில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.
கடந்த 6 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி, 5 கிலோ பருப்பு மோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. பைகளில் இலவச பொருட்களை வாங்கியவர்கள், மோடியால் மூடையில் வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர். மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி நிச்சயம் கிடைக்கும். மத்திய அரசு நடத்திய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் முடிவால்தான் காவிரியில் நீர் ஓடுகிறது. மழையால் அல்ல.
ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால், காதலாலும் தற்கொலை நடக்கிறது. அதற்காக காதலிப்பதை தடை செய்ய முடியுமா? தற்போதைய ஆன்லைன் வகுப்புகள் சில நாட்களில் ஆப்லைன் வகுப்புகளாக மாறிவிடும்.
ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பா.ஜ.க.வில் சேர்வது குறித்து நான் கருத்து கூற முடியாது. பா.ஜ.க. டெல்லிக்கு மட்டும் ராஜா அல்ல, தமிழகத்திலும் ராஜாதான். பா.ஜ.க. கூட்டணியில்தான் அ.தி.மு.க. உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story