பீடி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், சமத்துவ மக்கள் கழகத்தினர் மனு
சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அகரக்கட்டு லூர்து தலைமையில் அக்கட்சியினர், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கொரோனா கால அவசர உதவித்தொகை வழங்கப்பட்டது. அதுபோன்று பீடி தொழிலாளர்களுக்கும் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் இதுவரையிலும் பீடி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படவில்லை. இதற்கு உரிய ஆவணங்களை பீடி தொழிலாளர்கள் நல மருத்துவமனையில் சமர்ப்பித்துள்ளனர். எனவே பீடி தொழிலாளர்களுக்கு உடனே நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று சமத்துவ மக்கள் கழகத்தினர் வழங்கிய மற்றொரு மனுவில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தென்காசி தினசரி சந்தை அடைக்கப்பட்டது. தற்போது அரசு தளர்வுகள் அளித்த நிலையில், தினசரி சந்தையை உடனே மீண்டும் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story