சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நிவாஸ் வரவேற்றார்.
இதில் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், “கட்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபட வேண்டும். ஏராளமான உறுப்பினர்களை சேர்த்து ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி பேசுகையில், “இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையை உருவாக்கியது ஜெயலலிதா. எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரியும் என்ற வாக்கின் அடிப்படையில் முதல்- அமைச்சரின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வழிகாட்டியாக திகழ வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சங்கரன்கோவில் ஒன்றிய பாசறை செயலாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story