பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை நடிகை கங்கனாவின் கருத்துக்கு ஆதரவு இல்லை தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்


பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை நடிகை கங்கனாவின் கருத்துக்கு ஆதரவு இல்லை தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
x
தினத்தந்தி 8 Sept 2020 12:45 AM IST (Updated: 8 Sept 2020 12:45 AM IST)
t-max-icont-min-icon

நடிகை கங்கனாவின் கருத்துக்கு ஒருபோதும் பாரதீய ஜனதா ஆதரவு அளிக்காது, பாதுகாப்பு அளிப்பது மத்திய அரசின் கடமை என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

பிரபல நடிகை கங்கனா ரணாவத், “மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக” கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த பேச்சுக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவருக்கு மத்திய அரசு “ஒய்-பிளஸ்” பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து மராட்டிய மந்திரிகள் பா.ஜனதாவை விமர்சித்தனர்.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் கடமை

நடிகை கங்கனா ரணாவத் மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு கூறிய கருத்தை பாரதீய ஜனதா ஒருபோதும் ஏற்கவில்லை. இருப்பினும் ஒவ்வொரு தனிநபரின் உயிரை காப்பதும் அரசின் முக்கிய கடமையாகும்.

அதற்காக நாங்கள் அவரின் கருத்துக்களை ஆதரிக்கவில்லை. யாரும் ஆதரிக்கவும் போவதில்லை. நாங்கள் எங்களின் கடமையை செய்கிறோம்.

பயங்கரவாதிகள் கூட தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்களுக்கு சட்டத்தின் பார்வையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதிலும் கங்கனா ரணாவத் ஒரு கலைஞராக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story