சாராயக்கடையில் திருடியவர்களை பிடிக்கச் சென்றபோது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் சிறுவன் உள்பட 3 பேர் கைது
சாராயக் கடையில் திருடியவர்களை பிடிக்கச்சென்றபோது போலீசார் மீது கல்வீசி தாக்கிய ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்,
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). திருக்கனூர் அருகே குமாரபாளையத்தில் உள்ள சாராயக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு, ஆனந்தன் அங்கேயே படுத்து தூங்கினார். நள்ளிரவில் சாராயக்கடையின் சுவர் ஏறி குதித்து 3 பேர் உள்ளே புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தன் அருகில் வைத்து இருந்த ரூ.10 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போனை அவர்கள் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
அப்போது சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஆனந்தன், அந்த கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து ஆனந்தன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கல்வீசி தாக்குதல்
சாராயக்கடை அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பணம் மற்றும் செல்போனை திருடிச்சென்றவர்கள் வழுதாவூர் காலனியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 20), அசோக் (19) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் காட்டேரிக்குப்பம் குளத்தின் அருகில் உள்ள ஒரு புதரில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று, விக்னேஷ் உள்பட 3 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் திடீரென்று அவர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள்.
போலீஸ்காரர் காயம்
இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனை முடிவை பொருத்து போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
திருட்டுக் கும்பல் கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர் சக்திவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பிடிபட்ட 3 பேரும் வழுதாவூரை சேர்ந்த பிரபல ரவுடி முகிலனின் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் விக்கி என்கிற விக்னேஷ் மீது திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கும், கண்டமங்கலம் போலீசில் அடிதடி வழக்கும் உள்ளது.
திருட்டு கும்பலை பிடிக்கச் சென்ற போது போலீசார் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story