மாவட்ட செய்திகள்

சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமனம் + "||" + Sanjay Rawat appointed Shiv Sena chief spokesperson

சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமனம்

சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமனம்
சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். இவர் ராஜ்ய சபா எம்.பி.யாகவும் உள்ளார்.

இந்தநிலையில் சிவசேனாவின் தலைமை செய்தி தொடா்பாளராக சஞ்சய் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே செய்துள்ளார்.


ஆட்சியில் அமர்த்தியவர்

மராட்டியத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி உறவை முறித்து விட்டு கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனாவை ஆட்சி கட்டிலில் அமர்த்திய பெரும் பங்கு சஞ்சய் ராவத்துக்கு உண்டு.

கட்சி பத்திரிகையில் சிவசேனாவின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எழுதக்கூடியவர். மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறிய நடிகை கங்கனா ரணாவத்தை சஞ்சய் ராவத் கடுமையாக எதிர்த்ததை தொடர்ந்து, கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுாப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொடர்பாளர்கள்

இதேபோல எம்.பி.க்கள் அரவிந்த் சாவந்த், தைரீயசீல்மானே, பிரியங்கா சதுர்வேதி, மாநில மந்திரிகள் உதய் சாமந்த், அனில் பரப், குலாப்ராவ் பாட்டீல்.

எம்.எல்.ஏ.க்கள் சுனில் பிரபு, பிரதாப் சார்னிக், மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், நீலம் கோரே ஆகியோர் கட்சியின் செய்தி தொடர்பாளர்களாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் நியமனம்
மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. வழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? சஞ்சய் ராவத் பதில்
வழிபாட்டு தலங்களை திறப்பது எப்போது என்பதற்கு சஞ்சய் ராவத் பதில் அளித்து உள்ளார்.
3. பீகார் சட்டசபை தேர்தலுக்கு 2 சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம்
பீகார் சட்டசபை தேர்தலுக்கு 2 சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
4. திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் செய்ய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
5. மிரா பயந்தர்-வசாய் விரார் போலீஸ் கமிஷனரகம் இன்று உதயம் முதல் போலீஸ் கமிஷனராக சதானந்த் ததே நியமனம்
மிரா பயந்தர்-வசாய் விரார் போலீஸ் கமிஷனரகம் இன்று உதயமாகிறது. இதன் முதல் போலீஸ் கமிஷனராக சதானந்த் ததே நியமிக்கப்பட்டு உள்ளார்.