மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார யாத்திரை
“மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார யாத்திரை மேற்கொண்டு வருகிறோம்“ என்று தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராகிம் கூறினார்.
நெல்லை,
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறார். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த கொரோனா காலத்தில் நமக்கு கொடுத்த அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுத்து மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். மக்கள் நலம் காக்கும் மத்திய அரசை அரசியல் லாபத்திற்காக பல அரசியல் கட்சிகள் அதாவது தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் விமர்சித்து வருகின்றன.
பொய்யான தகவல்களை பரப்பி பிரதமர் நரேந்திர மோடியின் நன்மதிப்பை கெடுக்க முயற்சிக்கிறார்கள். இது போன்ற சூழலில் உண்மை நிலையை விளக்கவும், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை அறிந்து மக்கள் பயன்பெறவும் விழிப்புணர்வு பிரசார யாத்திரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை மேற்கொள்கிறோம். இந்த யாத்திரையை முறியடிக்க பலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அதையும் மீறி யாத்திரை சென்று கொண்டு இருக்கிறேன்.
புதிய கல்விக்கொள்கை
புதிய கல்விக்கொள்கையில் எந்த இடத்திலும் இந்தி திணிக்கப்படும் என்று கூறவில்லை. இது முழுக்க முழுக்க தி.மு.க.வினர் செய்கின்ற அற்ப அரசியலாகும்.
பா.ஜனதா கட்சி சாதி, மதத்தை கடந்து மக்கள் நலனுக்காக செயல்படக்கூடிய கட்சியாகும். இந்த கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, வாக்கு வங்கிக்காக காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள், பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த்
வருகிற சட்டசபை தேர்தலில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பா.ஜனதா கட்சி வழங்கும். காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்த பிறகு அங்கு தீவிரவாத தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்.
ரஜினிகாந்த் தேசிய சிந்தனை உள்ளவர் என்பதால் அவர் வருகின்ற தேர்தலில் கட்சி ஆரம்பித்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால், மிகப்பெரிய சக்தியாக வருவார்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் மகாராஜன், பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story