தென்காசி, புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி, புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி,
தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முகம்மது யாகூப் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் பண்பொழி செய்யது அலி, அச்சன்புதூர் ஷேக், கடையநல்லூர் பாசித், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜாபர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மைதீன் சேட்கான் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், செங்கோட்டை தலைவர் முஹபிலாஷா, பண்பொழி தலைவர் ராஜாஉசேன், அச்சன்புதூர் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், கடையநல்லூர் செயலாளர் மசூது, வடகரை தலைவர் ஜாபர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி-சங்கரன்கோவில்
இதேபோல் புளியங்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் செய்யது அலி பாதுஷா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அப்துர் ரஹ்மான், ஊடகப்பிரிவு தெற்கு மண்டல செயலாளர் எம்.எஸ்.ஹமீது, ம.ம.க. இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சேக் செய்யது அலி, த.மு.மு.க. நகர செயலாளர் ஆட்டோ அலி, ம.ம.க. நகர பொருளாளர் முகைதின், நகர துணை செயலாளர் முகைதீன், த.மு.மு.க. நகர துணை செயலாளர் ஆட்டோ ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக சங்கரன்கோவில் நகர செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பசீர்ஒலி, மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் மஜீத், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் தீன்மைதீன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் காதர்மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story