நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர்-மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர்-மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2020 6:01 AM IST (Updated: 9 Sept 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழகத்தில் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் மணல்மேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.

கருப்பு கொடி

இதேபோல் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம் தலைமையில் திண்டல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் பகுதி செயலாளர் மணிகண்டராஜா, வார்டு செயலாளர் சரவணமூர்த்தி, மாணவர் அணி துணை அமைப்பாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு கருப்புக்கொடியை ஏந்தி, மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினார்கள். கொரோனா பாதிப்பை தவிர்க்க ஒவ்வொரு பகுதியிலும் சிறு, சிறு குழுவினராக தி.மு.க. மாணவர் அணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இதுபோல் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் தலைமையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தி.மு.க. இளைஞர் அணியினர் கருப்பு கொடிகள் ஏந்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட நிர்வாகி அ.தமிழ்க்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story