காணொலி காட்சி மூலம் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நெல்லை நிர்வாகிகள் பங்கேற்பு
காணொலி காட்சி மூலம் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நெல்லை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை,
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் இருந்தே காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், துணை செயலாளர் சித்திக், பூங்கோதை எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ராஜன், மாரிவண்ணமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய மாவட்டம்
இதேபோல் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இதில் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், அவைத்தலைவர் சுப.சீத்தாராமன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., பொருளாளர் அருண்குமார், துணை செயலாளர்கள் ஆக.மணி, கிரிஜாகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story