இன்னும் பலர் சிக்குவார்கள் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது எடியூரப்பா பேட்டி
போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரை உலகில் போதைப்பொருள் கலாசாரம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் போதைப்பொருள் விற்ற வழக்கில் கைதான சின்னத்திரை நடிகை அனிகாவும், கன்னட திரை உலகினருக்கு போதைப்பொருள் விற்றதும், அவர்கள் விருந்து நிகழ்ச்சிகளின் போது போதைப்பொருளை பயன்படுத்தியதாகவும் கூறினார். அதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்தி மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அரசு அதிகாரி ரவிசங்கர், ராகுல் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் மறைந்த முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்ய ஆல்வா உள்பட மொத்தம் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 7 பேரையும் போலீசார் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தகவல்கள் பகிரங்கமாகி வருகின்றன.
கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போதைப்பொருள் விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த போதைப்பொருள் நடமாட்டம் இருந்து வருகிறது. முன்பு ஆட்சி செய்தவர்கள் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தனர். இப்போது இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் நடத்தும் விசாரணையில் இன்னும் பலர் சிக்குவார்கள்.
முழுமையான விசாரணை
இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. இந்த போதைப்பொருள் நடமாட்டம் குறித்து நாட்டின் வரலாற்றில் விரிவான, முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். மத்திய குழுவினர் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு வந்துள்ளனர். அவர்கள் இன்று (அதாவது நேற்று) மாலை தலைமை செயலாளரை சந்தித்து பேச உள்ளனர். நானும் விரைவில் டெல்லி செல்கிறேன். வெள்ள சேதத்திற்கு அதிக நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story