பாசிக்-பாப்ஸ்கோ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை திறக்க வலியுறுத்தி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை திறந்து தொடர்ந்து நடத்த வேண்டும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த கோரிக்கைகளுக்காக ஏ.ஐ.டி.யு.சி. பாசிக், பாப்ஸ்கோ ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்த சங்க கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுவை சட்டசபையின் பின்புறம் ஆம்பூர் சாலை அருகே ஊழியர்கள் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமைத்து சாப்பிட்டனர்
போராட்டத்துக்கு பாசிக் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பாப்ஸ்கோ சங்க தலைவர் ராஜி, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிசேகம், தலைவர் தினேஷ்பொன்னையா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். பாசிக் சங்க பொறுப்பாளர்கள் தரணிராஜன், அப்துல்லாகான், முத்துநாயுடு, அன்பழகன், பாலமுருகன், இருசப்பன், பாப்ஸ்கோ சங்க பொறுப்பாளர்கள் முருகவேல், ஜெய்சங்கர், அமுதா, ஏழுமலை, தமிழ்ஒளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதிய வேளையில் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். ஊழியர்களின் இந்த போராட்டம் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்தது.

Related Tags :
Next Story