அ.தி.மு.க. ஆட்சி நிலைத்து நிற்கும் 80 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வராது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் நிலைத்து நிற்கும் என்றும், 80 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வராது என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,
தி.மு.க. கால் ஊன்றாது
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. 2021-ல் தி.மு.க. ஆட்சி தான் உதயமாகும் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் பேசப்பட்டு இருக்கிறதே?
பதில்:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் இன்று கட்சி சூப்பராக சென்று கொண்டு இருக்கிறது. ஆட்சி இருக்காது என்று சொன்னார்கள். ஆட்சியும் தற்போது ‘சூப்பர் டூ சூப்பராக’ செல்கிறது. அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் 6 மாதத்தில் எங்கள் ஆட்சி என்றார். அதன்பிறகு 2 ஆண்டில் எங்கள் ஆட்சி என்று சொன்னார். கடைசியில் நரி ஏமாந்த கதையாகத்தான் முடிந்தது. இன்னும் 80 ஆண்டுகள் ஆனாலும் சரி தமிழ்நாட்டில் இனிமேல் தி.மு.க. ஆட்சிக் கால் ஊன்ற முடியாது. ஜெயலலிதா சொன்னது போல் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும்தான் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும். இது வரலாற்று உண்மை. வேறு யாருக்கும் தமிழ்நாட்டில் இடம் கிடையாது.
எந்த குழப்பமும் இல்லை
கேள்வி:- அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறதே?
பதில்:- அரசின் முடிவு தான் இறுதி. பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழிகாட்டுதல்படி அரசு முடிவு எடுத்துள்ளது. இதை யாரும் மீற முடியாது. அதன்படி தான் நடக்கிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை. பார்க்கிறவர்கள் மனதில் தான் குழப்பம் உள்ளது. மாணவர்கள் நலன் கருதி அரசு தெளிவான முடிவு எடுத்து இருக்கிறது.
கேள்வி:- மீனவர்கள் காணாமல் போய் 50 நாட்கள் ஆகிவிட்டது. அரசின் நடவடிக்கை என்ன?
பதில்:- சல்லடை போட்டு தேடிக் கொண்டு இருக்கிறோம். அருகில் உள்ள நாடுகளுக்கு காற்றினால் இழுத்து செல்லப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அண்டை நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதோடு, தேடுதல் பணியும் தொடர்ந்து நடக்கிறது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Related Tags :
Next Story