மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து 22-ந்தேதி நேரில் வழங்கப்படுகிறது + "||" + Tirupati Thirukudai procession canceled in Chennai due to corona curfew

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து 22-ந்தேதி நேரில் வழங்கப்படுகிறது

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து 22-ந்தேதி நேரில் வழங்கப்படுகிறது
கொரோனா காரணமாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாகவும், திருக்குடைகளை 22-ந்தேதி நேரில் வழங்க இருப்பதாகவும் கோபால்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் இருந்து இரண்டு வகையான மங்களப்பொருள்கள், ஆண்டுதோறும் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் திருப்பதி திருக்குடைகள். பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.


வரும் 22-ந்தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில், மத்திய, மாநில அரசுகள், பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால், சென்னையில் சென்னை கேசவ பெருமாள் கோவில் தொடங்கி, சென்னை, திருவள்ளூர் வழியாக திருமலை வரை செல்லும், ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுகிறது.

இணையதளத்தில் தரிசிக்கலாம்

முன்னதாக, சமர்ப்பிக்கப்பட உள்ள 11 அழகிய வெண் பட்டு திருகுடைகளுக்கும், 19-ந்தேதி பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில், யாக பூஜைகள் நடக்கின்றன. 20-ந்தேதி பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதனை தொடர்ந்து 22-ந்தேதி திருச்சானூர் தாயார் கோவிலில் 2 திருக்குடைகளும், திருமலை ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அரசின் கட்டுப்பாடு காரணமாக, இந்த 3 ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்கு, திருக்குடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் தரிசிக்க வசதியாக, 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் திருக்குடை சிறப்பு பூஜைகளை, TirupatiKudai மற்றும் rrgopaljee28 என்ற முகநூலிலும், RR. GOPALJEE என்ற யூடியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே பக்தர்கள் திருக்குடை பூஜைகளை தரிசிக்கலாம்.

அன்னதானம்

மேலும், இந்த ஆண்டு, திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்பட்ட காரணத்தால், வரும் 19-ந்தேதி திருப்பதி திருக்குடை கமிட்டியினர் மற்றும் பக்தர்கள், தங்கள் பகுதியில், அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி, ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று, ஏழுமலையான் படத்தை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்ய வேண்டும். அன்றைய தினம், ஓம் நமோ நாராயணாய திருநாமத்தை 1,008 முறை உச்சரித்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் பாரத நன்மைக்காக, சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அன்னதானம் பேக்கிங் செய்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றம் சப்பர வீதி உலா, தேரோட்டம் ரத்து
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ராமகோபாலன் மறைவுக்கு அஞ்சலி மவுன ஊர்வலம் செல்ல முயன்ற 50 பேர் கைது
தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ராமகோபாலன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மவுன ஊர்வலம் செல்ல முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கனடாவில் பரபரப்பு; முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
4. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கு: தேர்வுகளை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
5. இன்று விநாயகர் சதுர்த்தி விழா: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து
விநாயகர் சதுர்த்தியான இன்று(சனிக்கிழமை) மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து செய்யப்பட்டுள்ளது.