கவர்னர் கிரண்பெடி மீண்டும் மக்கள் குறை கேட்கிறார்
புதுவை கவர்னர் கிரண்பெடி மீண்டும் மக்கள் குறை கேட்கிறார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி வாரந்தோறும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணிமுதல் 6 மணிவரை பொதுமக்களிடம் குறைகேட்டு வந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த குறைகேட்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் மக்கள் குறைகேட்க கவர்னர் கிரண்பெடி திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கவர்னரின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் கிரண்பெடி பொதுமக்களின் குறைகளை கேட்கும் நிகழ்வை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறார். கோவிட் விதிமுறைகளை பின்பற்றி திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணி முதல் 6 மணிவரை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே மக்களின் குறைகளை கேட்கிறார்.
பதிவுசெய்ய வேண்டும்
வருகிற 14-ந்தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. அப்போது அவரிடம் தங்கள் குறைகளை கூற விரும்பும் பொதுமக்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை 0413-2337144, 2334050, 2334051 ஆகிய எண்களின் மூலம் அழைத்து பதிவு செய்யலாம்.
பொதுமக்களின் குறைகள் கவர்னர் மற்றும் அவரது குழுவினரால் 95005 60001 என்ற வாட்ஸ் அப் வீடியோ எண்ணில் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை கேட்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story