போலீஸ் கமிஷனர் பெயரில் போலி முகநூல் கணக்கு-சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்


போலீஸ் கமிஷனர் பெயரில் போலி முகநூல் கணக்கு-சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்
x
தினத்தந்தி 20 Sept 2020 4:45 AM IST (Updated: 13 Sept 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெயரிலேயே போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது

சென்னை, 

சென்னை மாதவரம் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ்முத்து, தண்டையார்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், மத்திய குற்றப்பிரிவு முன்னாள் உதவி கமிஷனர் ராஜேந்திரகுமார் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் முயற்சி வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெயரிலேயே போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மகேஷ் அதுல் அகர்வால் என்ற பெயரில் இந்த கணக்கு, அவர் தன்னுடைய மனைவியுடன் முகப்பில் இருப்பதுபோன்ற படமும், சீருடையில் இருப்பது போன்ற படமும் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கமிஷனர் கவனத்துக்கு வந்தது. உடனடியாக இந்த போலி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்.

இதேபோல கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் பெயரிலும் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விஷம செயலில் ஈடுபட்டுள்ள கும்பலை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அதிகாரிகள் பெயரில் உலா வரும் முகநூல் கணக்குகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே முக்கிய தகவல்களை பரிமாற வேண்டும் என்று போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story