ஆலந்தூரில் இரு தரப்பினர் மோதல்; தி.மு.க. பிரமுகரின் பல் உடைந்தது

ஆலந்தூரில் இரு தரப்பினர் மோதல்; தி.மு.க. பிரமுகரின் பல் உடைந்தது
x
தினத்தந்தி 12 Sep 2020 9:22 PM GMT (Updated: 12 Sep 2020 9:22 PM GMT)

குடியிருப்பு பகுதியில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் தி.மு.க. பிரமுகரின் 3 பற்கள் உடைந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

குடியிருப்பு பகுதியில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் தி.மு.க. பிரமுகரின் 3 பற்கள் உடைந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த ஆலந்தூர் லஸ்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் அமீது (வயது 22), ரசீத் (24). இவர்கள் இருவரும் ஆலந்தூர் ஜால் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது குடியிருப்பு பகுதியில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.

இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் (65) மற்றும் தி.மு.க. மாணவர் அணி செயலாளர் தீனதயாளன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்ற அமீது, ரசீத் இருவரும் தங்கள் நண்பர்கள் 5 பேருடன் மீண்டும் அங்கு வந்து தீனதயாளனிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தீனதயாளனுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தாரும் இணைந்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மறியது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை மாறி, மாறி வீசிக்கொண்டனர். இதில் தீனதயாளனின் முகத்தில் கல் வீசி தாக்கியதில் அவரது 3 பற்கள் உடைந்து விழுந்தன. இந்த மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.

இதைப் பார்த்து பொதுமக்கள் கூடியதால் ரசீத் உள்பட அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசீத் மற்றும் அமீது ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற அவரது நண்பர்கள் 5 பேரை தேடி வருகின்றனர்.

Next Story