சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம்
சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம் அடைந்தார்.
மும்பை,
மும்பை இந்தி திரைப்பட பின்னணி பாடகியாக இருந்து வருபவர் அனுராதா பட்வல். இவர் திரைப்படத்துறை சேவைக்காக கடந்த 2017-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். இவரது கணவர் அருண் பட்வல். இவர்களுக்கு ஆதித்யா பட்வல் (வயது35) என்ற மகனும், கவிதா பட்வல் என்ற மகளும் இருந்தனர்.
இவரது மகன் ஆதித்யா பட்வல் இசையமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தாக்கரே
உயிரிழந்த ஆதித்யா பட்வல் கடந்த ஆண்டு வெளியான தாக்கரே என்ற திரைபடத்திற்கு இசையமைத்து இருந்தார்.
இவரது மரணத்துக்கு பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story