மாவட்ட செய்திகள்

நடிகை கங்கனா போதை பொருளை பயன்படுத்தினாரா? விசாரணை நடத்த போலீசாருக்கு அரசு உத்தரவு + "||" + Did actress Kangana use drugs? Government orders police to investigate

நடிகை கங்கனா போதை பொருளை பயன்படுத்தினாரா? விசாரணை நடத்த போலீசாருக்கு அரசு உத்தரவு

நடிகை கங்கனா போதை பொருளை பயன்படுத்தினாரா? விசாரணை நடத்த போலீசாருக்கு அரசு உத்தரவு
நடிகை கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார். இதையடுத்து அவருக்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகையின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி அதை இடித்து தள்ளியது. இதனால் மோதல் மேலும் முற்றியது. நடிகை கங்கனா முதல்-மந்திரி தாக்கரேயை அவரது டுவிட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சித்தார்.


விசாரணை நடத்த உத்தரவு

இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகை கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

நடிகை கங்கனாவுடன், ஆத்யாயன் என்ற நடிகர் உறவில் இருந்தார். அந்த நடிகர் அளித்த பேட்டி ஒன்றில், கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தினார் எனவும், தன்னையும் போதை பொருளை பயன்படுத்த வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை வைத்து தான் கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிக்கந்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாட அனுமதி கோர்ட்டு உத்தரவு
சிக்கந்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அரசு வழிகாட்டுதல் படி நவராத்திரி விழா கொண்டாட அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மந்திரி யசோமதி தாக்கூரின் தண்டனை நிறுத்தி வைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யசோமதி தாக்கூருக்கு செசன்ஸ் கோர்ட்டு விதித்த 3 மாதம் கடுங்காவல் தண்டனையை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
3. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 1-ந் தேதி தொடங்குகிறது - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
4. நகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி: 3 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் கர்நாடக அரசு உத்தரவு
நகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் 3 போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
5. கொரோனா கட்டுப்பாடு விதிகளில் தளர்வு கர்நாடக அரசு அறிவிப்பு
அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் முகக்கவசம் அணிந்து 100 பேருக்கு மேல் கலந்து கொள்ளலாம் என்று கொரோனா கட்டுப்பாடு விதிகளில் கர்நாடக அரசு தளர்வுகளை அறிவித்து உள்ளது.