வங்கியில் வேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் மோசடி சென்னையை சேர்ந்தவர் மீது வழக்கு


வங்கியில் வேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் மோசடி சென்னையை சேர்ந்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Sept 2020 4:21 AM IST (Updated: 13 Sept 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் வேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூலக்குலம்,

புதுவை மேட்டுப்பாளையம் குரும்பாபேட் பகுதியை சேந்தவர் சீனிவாசன் (வயது 34). வக்கீல். இவருக்கும் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜசேகரன் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு வில்லியனூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை வாங்கித்தருவதாக சீனிவாசனிடம் ராஜசேகரன் கூறினாராம். அதற்காக சீனிவாசன் ரூ.2 லட்சத்தை அவரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ராஜசேகரன் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

வழக்குப்பதிவு

இதுகுறித்து போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். ஆனால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவின் பேரில் சீனிவாசன் புகார் தொடர்பாக ராஜசேகரன் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story