புளியங்குடி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்


புளியங்குடி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Sept 2020 5:06 AM IST (Updated: 13 Sept 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

புளியங்குடி,

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 15 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. இதில் ஒன்று மட்டும் குழந்தைகளுக்கானது. ஆம்புலன்ஸ்களின் தேவையை கருதி அரசு மருத்துவமனைகளுக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி புதிய ஆம்புலன்ஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 2 ஆம்புலன்ஸ்களில் ஒன்று கூடுதல் வசதி உள்ளதாகவும், மற்றொன்று அடிப்படை வசதி உள்ளதாகவும் உள்ளது. ஒரு ஆம்புலன்ஸ் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொன்று சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி, புளியங்குடி நகர செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணன், 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் ரஞ்சித், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இசக்கிமுத்து, புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுவர்ணா, அரசு மருத்துவமனை டாக்டர்கள் யாசர் அரபத், சங்கரி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story