தமிழர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2020 5:33 AM IST (Updated: 13 Sept 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதாக தமிழர் அமைப்புகள் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு,

தமிழர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதாக தமிழர் அமைப்புகள் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும். சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாணவர் அணி அமைப்பாளர் திருவாசகம், பிற அமைப்பு நிர்வாகிகள் ரத்தினசாமி, சண்முகம், நிலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Next Story