பிவண்டியில் 5 குடோன்கள் எரிந்து நாசம்
பிவண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 குடோன்கள் எரிந்து நாசமாகின.
மும்பை,
தானே மாவட்டம் பிவண்டி மன்கோலி பகுதியில் ஏராளமான குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களில் பிளாஸ் டிக், பேப்பர், காட்போர்டு உள்ளிட்ட பொருட்கள் வைக் கப்பட்டு இருந்தன. இந்தநிலை யில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இங்குள்ள ஒரு குடோனில் திடீரென தீப்பிடித் தது. தகவல் அறிந்த பிவண்டி மாநகராட்சி தீயணைப்பு துறையினர் அங்கு தன்ணீர் டேங்கருடன் விரைந்து வந்தனர். அதற்குள் குடோன் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அருகில் உள்ள குடோன்களுக்கும் தீ பரவியது.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி குடோன்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
5 குடோன்கள் எரிந்து நாசம்
இந்த பயங்கர தீ விபத்தில் 5 குடோன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த குடோன்களில் பிளாஸ்டிக் மற்றும் காகித பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என பேரிடர் மேலாண்டை பிரிவு அதிகாரி சந்தோஷ் கதம் கூறினார்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story