நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாசிக்- பாப்ஸ்கோ ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாசிக்- பாப்ஸ்கோ ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்.
புதுச்சேரி,
புதுவை அரசு சார்பு நிறுவனமான பாசிக் தொழிலாளர்களுக்கு 70 மாத சம்பளம், பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்கு 35 மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும், மூடப்பட்டுள்ள நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் சட்டசபை வளாகம் அருகில் மாதா கோவில் வீதியில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
4-வது நாளான நேற்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் முத்துராமன், பாப்ஸ்கோ சங்க தலைவர் ராஜி, செயலாளர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story