புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கவர்னர் கிரண்பெடி கருத்து


புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கவர்னர் கிரண்பெடி கருத்து
x
தினத்தந்தி 14 Sept 2020 4:12 AM IST (Updated: 14 Sept 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய அரசு நியமித்த குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படத் தொடங்கியுள்ளோம். அதே நேரத்தில் புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் இறப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. தேசிய சதவீதத்தை விட இது அதிகம். இதற்கு கொரோனா தொற்றின் அறிகுறி தொடங்கிய உடனேயே சிகிச்சைக்கு வர தவறுவது தான் முக்கிய காரணம்.

தொடக்க நிலையிலேயே பரிசோதிப்பது மிகவும் அவசியம். புதுவையில் தற்போது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நாள்தோறும் 3500-க்கும் அதிகமான பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முக்கியமானது நோயாளிகளை வெகு விரைவில் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான். இதுவே இறப்பு எண்ணிக்கையை குறைக்கும்.

முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் புதுச்சேரியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை தற்போது சற்று குறைந்து வருகிறது. விழாக்களில் பங்கேற்பதை மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பது அவசியம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story