நெல்லையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


நெல்லையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ‘நீட்‘ தேர்வுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை,

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வால் இதுவரை 13 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதுபோன்ற தற்கொலைகள் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம்

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மேலப்பாளையத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் கருணா தலைமை தாங்கினார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நெல்லையில் நீட் தேர்வு நடக்கும் இந்த நேரத்தில் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story