நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகை


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 14 Sept 2020 4:53 AM IST (Updated: 14 Sept 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

அச்சன்புதூர்,

செங்கோட்டை அருகே பண்பொழியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட துணை செயலாளர் செய்யதலி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பாசித், அப்துல்காதர், மாவட்ட அணி நிர்வாகிகள் செங்கை சாதீக், முஜீப், சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

த.மு.மு.க மாநில செயலாளர் மைதீன் சேட்கான் கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் முகம்மது யாகூப், த.மு.மு.க மாவட்ட செயலாளர் அகமதுஷா, ம.ம.க மாவட்ட செயலாளர் பஷீர்ஒலி, துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநில ம.ம.க செயற்குழு உறுப்பினர் இஸ்மத்மீரான் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story