தென்காசியில் கொட்டும் மழையில் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள்


தென்காசியில் கொட்டும் மழையில் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 14 Sept 2020 5:01 AM IST (Updated: 14 Sept 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கொட்டும் மழையில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத வந்தனர்.

தென்காசி,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது.

தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் தனியார் பள்ளியிலும், சங்கரன்கோவிலில் 2 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த மாணவ- மாணவிகள், காலையில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர்.

தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 11 மணி அளவில் பரவலான மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. பின்னர் பகல் முழுவதும் மேகமூட்டமாக இருந்தது. மதியம் சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது.

கொட்டும் மழையில்

எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தென்காசி இலத்தூரில் உள்ள தேர்வு மையத்துக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து நீட் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து வந்தனர். அவர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை கழுவிய பின்னர் சமூக இடைவெளியுடன் தேர்வு மையத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் பரிசோதனை நடத்தப்பட்டது. ஹால் டிக்கெட், தண்ணீர் பாட்டில் தவிர வேறு எதுவும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story