மாவட்ட செய்திகள்

காரிமங்கலத்தில் 881 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார் + "||" + Minister KP Anpalagan provided welfare assistance to 881 beneficiaries in Karimangalam

காரிமங்கலத்தில் 881 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

காரிமங்கலத்தில் 881 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
காரிமங்கலத்தில் 881 பயனாளிகளுக்கு ரூ.2.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
காரிமங்கலம்,

காரிமங்கலம் ஒன்றியம் கெரகோடஅள்ளியில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், திட்ட இயக்குனர் ஆர்த்தி, காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 881 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி இலவச வீட்டுமனைப்பட்டா, உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

முககவசங்கள்

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் வீட்டுமனைபட்டா கோரிய அனைவருக்கும் வழங்க அரசுக்கு சொந்தமான இடம் இல்லாதபோது அதற்கு மாற்று வழியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடுகள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ரேஷன்கடைகள் மூலம் முககவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக முதல் தவணையாக தர்மபுரி மாவட்டத்திற்கு 4 லட்சத்து 30 ஆயிரம் முககவசங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், கூட்டுறவு இணைப்பதிவாளர் ராமதாஸ், உதவி கலெக்டர் தணிகாசலம், தாசில்தார் கலைச்செல்வி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூமி பூஜை

இதேபோல் காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள், சிமெண்டு சாலைகள், பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட 25 புதிய திட்டப்பணிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்கிறார்கள்: ஜெயிலிலுக்கு சென்று வந்தவர்களை புறக்கணிக்க கூடாது கலெக்டர் பேச்சு
சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலர் குற்றம் செய்கிறார்கள். ஜெயிலுக்குச் சென்று வந்தவர்களை இந்தச் சமூகத்தினர் புறக்கணிக்கக்கூடாது என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
2. சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்
3. திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
5. கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.