மாவட்ட செய்திகள்

மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் + "||" + What is the cause of declining corona damage in Madurai? Description by health officials

மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்

மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மதுரை,

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி விட்டது. அதன்படியே தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடக்க காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.


தொடக்கத்தில் கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்களில் தற்போது கொரோனா அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதாவது கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரம்ப காலத்தில் நாளொன்றுக்கு 10, 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 300, 400 என அதிகரித்து வருகிறது. இது ஒரு சங்கிலி தொடர் போன்றது தான். கொரோனா பாதிப்பானது அதிகரித்து குறையும். அந்த வகையில் மதுரையில் தற்போது கொரோனா பாதிப்பு இறங்குமுகமாக மாறி இருக்கிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் காரணம். வரும் காலங்களிலும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அலட்சியம் கூடாது

பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மற்ற நோய்கள் போல் கொரோனாவிடம் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியம் காட்டினால் அது விபரீதமாக மாறிவிடும். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நிவாரணம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் குழு சரமாரி கேள்வி அரசு அதிகாரிகள் திணறல்
கொரோனா நிவாரணம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு அதிகாரிகள் திணறினார்கள்.
2. பிணமாக மீட்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து சென்று சுஷாந்த் சிங்கின் நண்பர், வேலைக்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து சென்று அவரது நண்பர், வேலைக்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
3. ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து வீடு புகுந்து பெண்ணிடம் கைவரிசை காட்டிய 3 பேர் கைது
ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து வீடு புகுந்து பெண்ணிடம் கைவரிசை காட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
4. 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்த் நியமனம்
கர்நாடகத்தில் நேற்று 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர்ராவை இடமாற்றம் செய்ததுடன், புதிய கமிஷனராக கமல்பந்தை நியமித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. நடிகர் ரஜினிகாந்த் ‘இ-பாஸ்’ பெற்றே காரில் பயணம் சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையாக ‘இ-பாஸ்’ பெற்றே காரில் பயணம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.