மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் கலெக்டர் பேச்சு + "||" + Collector talk about making sure women get access to nutritious food

பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் கலெக்டர் பேச்சு

பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் கலெக்டர் பேச்சு
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்துஉணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
கோவை,

ஊட்டச்சத்து மாதம் (போஜன் அபியான்) திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் மூலம் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-


ஊட்டசத்து நிறைந்த குழந்தைகளை உருவாக்குவது, சமுதாய வீட்டுத் தோட்டம் அமைப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த செயலாக்க திட்டங்களை வீடுகள் தோறும் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போஜன் மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு குழந்தையின் சுகவீனத்துக்கு சத்து இன்மை மட்டுமே காரணமல்ல. அத்துடன் தொடர்புடைய, குழந்தை முதிரா நிலை, குறைவான எடையில் பிறத்தல், நிமோனியா உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. போஜன் மா திட்டம் எனப்படும் தேசிய ஊட்டச்சத்து திட்டமானது இதுபோன்ற குறைபாடுகள் குறித்து கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கருவியாக செயல்பட்டு வருகிறது.

உறுதி செய்ய வேண்டும்

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. அதன் அடிப் படையில் இந்த மாதத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் முடிந்ததும் திட உணவை அறிமுகப்படுத்துதல், கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிறகும், பெண்கள் முறையான ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் திட்ட அலுவலர் மீனாட்சி, துணை இயக்குனர் கிருஷ்ணா, மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிரபாகரன், உதவி இயக்குனர் துவாரகநாத்சிங் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று கால நிவாரணமாக அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட உலர் உணவு பொருட்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
2. குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 9 அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. மழையின் போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு கலெக்டர் ராமன் தகவல்
மழையின்போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
4. வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு
வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
5. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.