கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Sept 2020 8:35 AM IST (Updated: 15 Sept 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி திட்ட மேலாளர் மணிரத்னம், மாவட்ட பயிற்சி மருத்துவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கிரண்குராலா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

4¼ லட்சம் பேருக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் வருகிற 28-ந் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. 45 ஆரம்ப சுகாதார நிலையம், 212 துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 14-ந் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை திங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், மருத்துவ அலுவலர் ஜெகதீஸ்வரன், இளநிலை பூச்சியியல் வல்லுநர் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மகாலிங்கம், சுந்தரபாபு, சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், வெங்கடேசன், தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story