மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்பு + "||" + 324 Tested positive in chengal pattu on lasat 24 hours

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் பாளையத்தம் கோவில் தெருவில் வசிக்கும் 65 வயது முதியவர், கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண், மகாலட்சுமி நகரை சேர்ந்த 29 வயது வாலிபர், வண்டலூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் 66 வயது முதியவர், 22 வயது இளம்பெண், 32 வயது ஆண் உள்பட 34 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கூடலூர் அஷ்டலட்சுமி நகரில் வசிக்கும் 34 வயது ஆண், கலைவாணர் தெருவை சேர்ந்த 43 வயது ஆண், பனங்காட்டூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 20 வயது வாலிபர் உள்பட 12 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 4 பேர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 28 ஆயிரத்து 457 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 491 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 119 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
4. இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா
இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்: காரில் தவற விட்ட 25 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு டிரைவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக முகாம் நடைபெறுகிறது.