மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by student unions demanding cancellation of NEET exam

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,

நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவர் சங்க மாநில துணை செயலாளர்் பிரகாஷ், மாவட்ட தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


2 கோடி பேருக்கு வேலை

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் அடக்குமுறையை கையாண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் படித்த இளைஞர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டு வருவதால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை மத்திய அரசு உறுதிபடுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பரீட்சை தொடங்கியது இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு
திருச்சி மாவட்டத்தில் 10, 12 வகுப்பு தனித்தேர்வுகளுக்கு 22 மையங்களில் நேற்று பரீட்சை தொடங்கியது. இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினர்.
2. ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
3. உலகின் தூய்மையான கடற்கரைகளின் பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு
உலகின் தூய்மையான கடற்கரைகள் என்ற பெருமையை பெறுவதற்கான பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
4. தென்காசியில் கொட்டும் மழையில் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள்
தென்காசியில் கொட்டும் மழையில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத வந்தனர்.
5. கடும் கட்டுப்பாடுகளுடன் ‘நீட்’ தேர்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6 ஆயிரத்து 233 பேர் எழுதினர்
கடும் கட்டுப்பாடுகளு டன் நேற்று நடந்த நீட் தேர்வை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6,233 பேர் எழுதினர்.