குமரி மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பத்மநாபபுரம்,
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தக்கலையில் அவரது சிலைக்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசந்திரன், பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெஜினால்டு, புஷ்பலீலா ஆல்பன், தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்தம் ஜார்ஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ரேவன் ஹில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ததேயு பிரேம் குமார், ஒன்றிய நிர்வாகிகள் கலைகிரி, ஜார்ஜ் ஸ்டீபன், லாரன்ஸ் விபின், ஜெயகுமார், ஒன்றிய பிரதிநிதி அருள் சங்கர், முன்னாள் கிள்ளியூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தக்கலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பத்மநாபபுரம் நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட இந்து அறநிலைய துறை தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நகர பொருளாளர் பீர்முகமது, மாவட்ட சிறுபான்மை இணை செயலாளர் ஜெகபர், திக்கணங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன் போஸ்கோ, கப்பியறை பேரூர் செயலாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தக்கலை ஒன்றியம் குமாரபுரம் பேரூராட்சி ம.தி.மு.க. சார்பில் அண்ணா, பெரியார் உருவ படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அலெக்சாண்டர், அவைத் தலைவர் டேனியல் சிங், தக்கலை ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜெபர்சன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் டேவிட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பேரூர் பொருளாளர் டேவிட் ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எட்வர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குழித்துறை
அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குழித்துறை நகர தி.மு.க. சார்பில் நேற்று குழித்துறையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் மாகீன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தினகர், மாவட்ட அவைத்தலைவர் பப்புசன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கிருபா, நகர இளைஞர் அணி செயலாளர் ஆசாத் அலி, பைங்குளம் பேரூர் செயலாளர் அம்சி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளச்சல்
குளச்சலில் நகர தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் ரகீம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்ட துணை செயலாளர் அர்ஜூனன், நகர பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் நூர்முகமது, ஷீலா ஜெயந்தி, லாரன்ஸ், சாதிக், தொண்டரணி அமைப்பாளர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல், முன்னாள் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நாகூர்கன், முகமது சாலி, மரிய சொர்ணம், ஆல்பின், ஹைதர், இஸ்மாயில், ஜப்பார் உள்பட பலர் கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. குளச்சல் தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா முன்னிலை வகித்தார். நகர அவைத்தலைவர் சாகுல் அமீது, முன்னாள் செயலாளர்கள் பஷீர்கோயா, தாசீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ஸ்டார்வின் தம்பிராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராபர்ட் கிங்சிலி, மாவட்ட பிரதிநிதி டென்னிசன் மற்றும் டென்சன், சிறில் பிரிட்டோ, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story