மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம் + "||" + Anna's birthday celebration in Krishnagiri district

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ராசுவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வளத்தலைவர் தென்னரசு, அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் வெங்கடாசலம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் சரவணன், பேரவை நகர செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு வங்கித் தலைவர் நெடுஞ்செழியன், நகர மீனவரணி செயலாளர் புகழேந்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகர செயலாளர் விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மற்றும் கட்சியினர் அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர் சரவணன், இணைச்செயலாளர் அம்சவேணி ரமேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜ், இந்திரா ராஜா, ஒன்றிய துணை செயலாளர் கலா குமரேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் ரமேஷ், ஆஜி மேஸ்திரி, தாபா வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர் அசோகன், முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் முருகன், கோபி, சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான பையூர் பெ.ரவி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள்.

இதில் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், நகர செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சுந்தரேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் விக்ரம்குமார், சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர், ஒன்றிய மாணவரணி செயலாளர் சுரேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா ஓசூரில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, ஓசூர் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கே.மதன், ஜெயலலிதா பேரவையின் மேற்கு மாவட்ட செயலாளர் சிட்டிஜெகதீசன், மாவட்ட பொருளாளர் கே.நாராயணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.வாசுதேவன், நந்தகுமார், சுரேஷ்பாபு, அசோகா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது.
2. மேல்மருவத்தூர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
மேல்மருவத்தூர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடந்தது.
3. கொரோனா பரவலால் எளிமையாக நடக்கிறது உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக கொண்டாடப் பட உள்ளது. விழாவை கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார்.
4. நெல்லையில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா
நெல்லையில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
5. அம்மன் கோவில்களில் தசரா விழா கால்நாட்டுடன் தொடங்கியது
பாளையங்கோட்டையில் அம்மன் கோவில்களில் தசரா விழா நேற்று கால்நாட்டுதலுடன் தொடங்கியது.