பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2 கோடியே 22 லட்சம்


பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2 கோடியே 22 லட்சம்
x
தினத்தந்தி 16 Sep 2020 3:42 AM GMT (Updated: 16 Sep 2020 3:42 AM GMT)

பழனி முருகன்கோவிலில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 7 மாதங்களுக்கு பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

பழனி,

பழனி முருகன்கோவிலில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 7 மாதங்களுக்கு பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணி 2-வது நாளாக நேற்று பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) நடராஜன் தலைமையில், கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2-வது நாள் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 98 ஆயிரத்து 40-ம், தங்கத்தால் ஆன வேல், மோதிரம், தாலி, காசு என 491 கிராம் பொருட்கள், வெள்ளியாலான வேல், பாதம் உள்ளிட்ட 3 ½ கிலோ பொருட்கள் மற்றும் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி 473-ம் கிடைத்தது. மேலும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2 நாட்களின் உண்டியல் மொத்த வருவாய் ரூ. 2 கோடியே 22 லட்சத்து 40 ஆயிரத்து 570 கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் வங்கி அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றும்(புதன்கிழமை) நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story